Custom Search

15.8.11

சிரிங்க...

மகன் : I am a complan Boy....

மகள் : I am a complan Girl......

தந்தை : என்ன கொடுமை sir இது...... நான் பெத்த பிள்ளைங்க கண்ட கண்டவன் பெயரெல்லாம் சொல்லிட்டு திரியுதுங்க........

---------------------------------------------------------------------

ஆசிரியர் : என்னடா கணக்க தப்பா போட்டுட்டு dance ஆடிகிட்டுறுக்க.....

மாணவன் : நீங்க தான சார் சொன்னிங்க கணக்கு தப்பா இருந்தாலும் step க்கு மார்க் போடுவேனு.....

ஆசிரியர் : ????

---------------------------------------------------------------------

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.....

ஒரு தடவை இரண்டு தடவை புகை புடிச்சவங்களாம் அந்த பழக்கத்துக்கு அடிமையாகிடுறாங்க.....

ஆனால் 5 வயதிலிருந்தே படிக்க ஆரம்பித்த நாம் ஏன் இன்னமும் அதற்கு அடிமை ஆகவில்லை......

9.8.11

டாடாவின் குறைந்த விலை வீடுகள் @ 32,000



பல்வேறு துறைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ‘டாட்டா’ நிறுவனமானது, தங்களது அலட்டலில்லாத பயங்கர அதிரடிகளுக்கு பெயர் போனது யாவரும் அறிந்ததே.

முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.

டாட்டா நிறுவனதிதின் இத்திட்டத்தின் மூலம், ஏழை கிராம புற மக்களுக்காக, ஏழே நாட்களில் 20 சதுர மீட்டரில் அல்லது சுமார் 215 சதுர அடியில் சுமார் 32,000 ரூபாயில் தரமான வீடுகளை கட்டித்தரப்படும் என தெரிகிறது.

இதற்கு அடுத்த வகை வீடுகள் சுமார் 30 சதுர மீட்டர் அல்லது சுமார் 322 சதுர அடிகளில் சுமார் 42,000 ரூபாய்களில் வழங்கப்படும்.

இந்த வீடுகள் முன்கூட்டி புனையப்பட்ட (Pre-fabricated) பொருட்களால் உருவாக்கப்பட்ட, மேல் கூரை, கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை மேற்கூரையுடன் சேர்த்து ஒன்று கூடி கட்டவும், பின்னர் தேவைபட்டால் பிரித்து மற்றுமோர் இடத்தில் மீண்டும் கட்டவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறை தலைமை நிர்வாகி சுமிதேஷ் டாஸ், கூறுகையில், விலை குறைந்த வீடுகள் திட்டம் குறித்து மாநில அரசுகலுடனும், சனல் வாரியம் மற்றும் தேங்காய் நார் பொருட்கள் வாரியங்கள் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அடுத்ததாக சூரிய ஒளி மின்சாரம் வசதி கொண்ட வீடுகளை கட்டி விற்கவும் திட்டங்கள் இருப்பதாக கூறினார்.

குறித்த விலையில் வீடுகளை கட்டும் திட்டத்திற்கு, தோதுவான நிலம் கிடைத்தவுடன், இந்த திட்டததை விரைவில் தொடங்கவிருப்பதாக் டாடா ஸ்டீல் நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக இந்தியாவில் சுமார் 30 இடங்களில் சோதனை அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு, ஆய்வுக்கு விடப்பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக அடிப்படையான வசதிகளை கொண்ட சுமார் 32000 ரூபாய் மதிப்புள்ள வீடுகளையும், அடுத்த கட்டமாக சுமார் 43,000 ரூபாய் மதிப்புள்ள வீடுகளையும் டாடா ஸ்டீல் நிறுவனம் கட்டி விற்க இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் இப்போது வழங்கப்படும் கட்டிடங்களின் சராசரி ஆயுள் சுமார் 20 வருடங்களாக இருக்கும் எனவும், நாளடைவில் அதிக வீடுகளை காட்டும்போது, இந்த ஆயுட்கால அளவானது மென்மேலும் அதிகரிக்கும் வகையில் வீடுகள் காட்டப்படும் எனவும் தெரிகிறது.

‘Firefox’ உலவியின் வேகத்தை அதிகப்படுத்தலாம் வாங்க!!!



நீங்கள் இணையத்தில் உலா வர ‘Firefox’ பயன்படுத்துகிறீர்களா? அவ்வாறெனில் கீழ்கண்ட முறையில் உங்களது ‘Firefox’ உலவியின் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

1. முதலில் ’Firefox’ இன்  முகவரி பட்டியில் ( Address Bar) “about: config” என தட்டச்சு  செய்து பின்னர் ‘Enter’ தட்ட, பின்னர் வரும் எச்சரிக்கைக்கும் ‘Ok’ கொடுத்தால் வரும் உள்ளீடுகளில், பின்வரும் உள்ளீடுகளை தேர்ந்தெடுங்கள்:

           * network.http.pipelining

           * network.http.proxy.pipelining

           * network.http.pipelining.maxrequests

2. மேற்கண்ட உள்ளீடுகலுக்கேதிரான ‘மதிப்புக்களை’ கீழ்கண்டவாறு இருக்குமாறு விடவோ அல்லது  மாற்றவோ செய்யவும்:

* “network.http.pipelining”னுக்கு எதிராக  “true “ என அமைக்கவும்

* “network.http.proxy.pipelining” னுக்கு எதிராக  “true “ என அமைக்கவும்

* “network.http.pipelining.maxrequests” க்கு எதிராக  “20 “ என அமைக்கவும்

3. இறுதியாக உலவித்திரையில் எங்காவது  வலது கிளிக் (Right Click) செய்து வரும் ‘விழும் பெட்டியில்’ (Drop Down box) New பின்னர் Integer தேர்ந்தெடுக்கவும்.

இதன் பின்னர் வரும் பெட்டியில், “nglayout.initialpaint.delay” என்று தட்டச்சு செய்து ‘Ok’ செய்ய, மீண்டும் வரும் பெட்டியில்  “0″ என்ற  மதிப்பை உள்ளிடவும்.

இந்த “௦” மதிப்பானது பெறும் தகவல்களை செயல்படுத்தும் முன்னர், உலாவி காத்திருக்கும் நேரமே ஆகும். இதை “0″ என்ற மதிப்புக்கு மாற்றுவதன் மூலம் ‘Firefox’ இன் பதிலளி வேகத்தை (Response Time) உடனடியாக மாற்றிவிடுவதால், இனி உங்களது ‘Firefox’ அதிவேகமாக செயல்படும் என்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்