Custom Search

24.4.11

ராஜபக்சே பெயரை நீக்கியது டைம்ஸ் பத்திரிகை

 உலகின் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இருந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பெயரை டைம்ஸ் பத்திரிகை திடீரென நீக்கியுள்ளது.



வாசகர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில், அந்த பட்டியலில் அவரது பெயர் இதுவரை 4-ம் இடத்தில் இருந்தது.



இந்நிலையில், அந்த வாக்கெடுப்பில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதற்கான பணியில் அதிபர் ராஜபக்சேவின் ஊடகப்பிரிவு அலுவலகத்தில் தனிக் குழு ஒன்று செயல்பட்டதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.



இதனிடேயே போலி வாக்குகள் மூலம் ராஜபக்சேவின் பெயர் முன்னணிக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று காலை பட்டியலில் இருந்தே அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு எடுத்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பிரபலமான பத்திரிகையின் பட்டியலில் ராஜபக்சே பெயரை முன்னணியில் இடம்பெறச் செய்ய அதிபரின் ஊடக அலுவலகமே மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் நாழிதள் அறிவித்த முடிவு வரிசை

19.4.11

நகைச்சுவை துணுக்குகள்

ஒரு பெண் இறந்து சொர்க்கம் போனாள்,வாசலில் நின்றிருந்த போது அங்கே கடவுள் வந்தார், அவள் அவசரமாக "எப்படி உள்ளே வருவது?" என்றாள்.

"நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாளர் அங்கே எழுதியிருந்தது
"love"

அவள் சொன்னதும் வழி விடப்பட்டது.

சொர்க்கத்தில் ஒரு வருடம் கழிந்தது.

ஒரு நாள் கடவுள் அவளிடம் வந்து இன்றொரு நாள் வருபவர்களை கவனித்துக் கொள் எனக்கு வேலை இருக்கிறது" என்றார்.

அவள் கேட்டில் நின்ற போது அவள் கணவன் வந்தான்,"ஹேய் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை"

"சரி பூமியில் எப்படி வாழ்ந்தாய்?"

"நீ காய்ச்சலாக கிடந்த போது பார்த்துக்கொண்டாளே ஒரு அழகான நர்ஸ் அவளை கல்யாணம் செய்து கொண்டேன் லாட்டரியில் பரிசு கிடைத்தது நாம் இருந்த சின்ன வீட்டை விற்று பெரிய அப்பார்ட்மெண்ட் போனோம் அப்புறம் டூர் போனபோது ஆக்சிடெண்ட் ஆகி இறந்து இங்கே வந்தேன் சரி எப்படி உள்ளே வருவது?"

"நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாள் அங்கே எழுதியிருந்தது,

"Czechoslovakia.

14.4.11

வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...




தமிழீழத்தில் 3 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு, தமிழக மீனவர்களையும் கொன்று கொண்டிருக்கும், போர் குற்றவாளி ராஜபக்சே, சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற மீண்டும் ஒரு முயற்சி எடுக்கிறான்.

2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் இனவெறியன் ராஜபக்சேவுக்கு எதிராக (Not influential) வாக்களியுங்கள்…

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

வாக்களியுங்கள்...... ஏப்ரல் 21க்கு முன்பாக.......

அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்