15.8.11
சிரிங்க...
9.8.11
டாடாவின் குறைந்த விலை வீடுகள் @ 32,000
பல்வேறு துறைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ‘டாட்டா’ நிறுவனமானது, தங்களது அலட்டலில்லாத பயங்கர அதிரடிகளுக்கு பெயர் போனது யாவரும் அறிந்ததே.
முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.
டாட்டா நிறுவனதிதின் இத்திட்டத்தின் மூலம், ஏழை கிராம புற மக்களுக்காக, ஏழே நாட்களில் 20 சதுர மீட்டரில் அல்லது சுமார் 215 சதுர அடியில் சுமார் 32,000 ரூபாயில் தரமான வீடுகளை கட்டித்தரப்படும் என தெரிகிறது.
இதற்கு அடுத்த வகை வீடுகள் சுமார் 30 சதுர மீட்டர் அல்லது சுமார் 322 சதுர அடிகளில் சுமார் 42,000 ரூபாய்களில் வழங்கப்படும்.
இந்த வீடுகள் முன்கூட்டி புனையப்பட்ட (Pre-fabricated) பொருட்களால் உருவாக்கப்பட்ட, மேல் கூரை, கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை மேற்கூரையுடன் சேர்த்து ஒன்று கூடி கட்டவும், பின்னர் தேவைபட்டால் பிரித்து மற்றுமோர் இடத்தில் மீண்டும் கட்டவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறை தலைமை நிர்வாகி சுமிதேஷ் டாஸ், கூறுகையில், விலை குறைந்த வீடுகள் திட்டம் குறித்து மாநில அரசுகலுடனும், சனல் வாரியம் மற்றும் தேங்காய் நார் பொருட்கள் வாரியங்கள் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அடுத்ததாக சூரிய ஒளி மின்சாரம் வசதி கொண்ட வீடுகளை கட்டி விற்கவும் திட்டங்கள் இருப்பதாக கூறினார்.
குறித்த விலையில் வீடுகளை கட்டும் திட்டத்திற்கு, தோதுவான நிலம் கிடைத்தவுடன், இந்த திட்டததை விரைவில் தொடங்கவிருப்பதாக் டாடா ஸ்டீல் நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் சுமார் 30 இடங்களில் சோதனை அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு, ஆய்வுக்கு விடப்பட்டுள்ளன.
இதன் தொடக்கமாக அடிப்படையான வசதிகளை கொண்ட சுமார் 32000 ரூபாய் மதிப்புள்ள வீடுகளையும், அடுத்த கட்டமாக சுமார் 43,000 ரூபாய் மதிப்புள்ள வீடுகளையும் டாடா ஸ்டீல் நிறுவனம் கட்டி விற்க இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இப்போது வழங்கப்படும் கட்டிடங்களின் சராசரி ஆயுள் சுமார் 20 வருடங்களாக இருக்கும் எனவும், நாளடைவில் அதிக வீடுகளை காட்டும்போது, இந்த ஆயுட்கால அளவானது மென்மேலும் அதிகரிக்கும் வகையில் வீடுகள் காட்டப்படும் எனவும் தெரிகிறது.
‘Firefox’ உலவியின் வேகத்தை அதிகப்படுத்தலாம் வாங்க!!!
1. முதலில் ’Firefox’ இன் முகவரி பட்டியில் ( Address Bar) “about: config” என தட்டச்சு செய்து பின்னர் ‘Enter’ தட்ட, பின்னர் வரும் எச்சரிக்கைக்கும் ‘Ok’ கொடுத்தால் வரும் உள்ளீடுகளில், பின்வரும் உள்ளீடுகளை தேர்ந்தெடுங்கள்:
* network.http.pipelining
* network.http.proxy.pipelining
* network.http.pipelining.maxrequests
2. மேற்கண்ட உள்ளீடுகலுக்கேதிரான ‘மதிப்புக்களை’ கீழ்கண்டவாறு இருக்குமாறு விடவோ அல்லது மாற்றவோ செய்யவும்:
* “network.http.pipelining”னுக்கு எதிராக “true “ என அமைக்கவும்
* “network.http.proxy.pipelining” னுக்கு எதிராக “true “ என அமைக்கவும்
* “network.http.pipelining.maxrequests” க்கு எதிராக “20 “ என அமைக்கவும்
3. இறுதியாக உலவித்திரையில் எங்காவது வலது கிளிக் (Right Click) செய்து வரும் ‘விழும் பெட்டியில்’ (Drop Down box) New பின்னர் Integer தேர்ந்தெடுக்கவும்.
இதன் பின்னர் வரும் பெட்டியில், “nglayout.initialpaint.delay” என்று தட்டச்சு செய்து ‘Ok’ செய்ய, மீண்டும் வரும் பெட்டியில் “0″ என்ற மதிப்பை உள்ளிடவும்.
இந்த “௦” மதிப்பானது பெறும் தகவல்களை செயல்படுத்தும் முன்னர், உலாவி காத்திருக்கும் நேரமே ஆகும். இதை “0″ என்ற மதிப்புக்கு மாற்றுவதன் மூலம் ‘Firefox’ இன் பதிலளி வேகத்தை (Response Time) உடனடியாக மாற்றிவிடுவதால், இனி உங்களது ‘Firefox’ அதிவேகமாக செயல்படும் என்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.
2.7.11
பூமியை காப்போம்
அருமையான காணொளி......
தவறாமல் முழுவதும் பார்ர்க்கவும்
28.6.11
21.6.11
மங்காத்தா - அஜீத் - முன்னோட்டம்
19.6.11
கறுப்பு பண வேட்டை - சுவிஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம்
இந்தியாவைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் பலர், உள்நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணத்தை, சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பணத்தின் அளவு, 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, நம்பப்படுகிறது. உலகிலேயே சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, இவர்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதற்கிடையில், சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை பெற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இந்தியாவைப் போல, வேறு பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளதால், அந்த நாடுகளும், தங்கள் நாட்டவர்களின் பெயர், விவரங்களை தர வேண்டும் என, சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன.இப்படி உலக நாடுகள் தரப்பில் நெருக்கடி அதிகரித்ததால், வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி தொடர்பான ஒப்பந்தங்களில், சுவிட்சர்லாந்து அரசு மாற்றம் செய்துள்ளது. அந்த மாற்றங்களுக்கு சுவிட்சர்லாந்து பார்லிமென்டின் மேல்சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனால், சுவிட்சர்லாந்து நாட்டுடன் இரட்டை வரி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகள் இனி பலன் அடையலாம்.
சுவிஸ் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளில் தங்கள் நாட்டைச் சேர்ந்த யார், யார் எல்லாம் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளனர், எவ்வளவு டிபாசிட் செய்துள்ளனர் என்ற தகவல்களைப் பெறலாம். கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் சர்வதேச வங்கி கணக்கு எண்கள் மற்றும் சமூக பாதுகாப்பு எண்களைக் கொடுத்து, இவற்றைப் பெறலாம்.இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியா, ஜெர்மனி, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் பயன் பெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவுடனான இரட்டை வரி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய, சுவிட்சர்லாந்து பார்லிமென்ட் குழு ஒப்புதல் அளித்தது. அதனால், நடப்பாண்டில் இருந்தே சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் குவித்துள்ளவர்களின் தகவல்களை இந்தியா பெறலாம்.
சுவிட்சர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையால், அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளதாகவே தோன்றுகிறது.
15.6.11
கல்யாண கலாட்டா...
"என்னமா இத்தனை தொட்டுக்க இருக்கு.. இப்போ போயி ஆம்லெட் போட்டுட்டு இருக்க, அதுவும் சின்ன வெங்காயம் எல்லாம் போட்டு.. வாம்மா வந்து உக்காரு சேந்து சாப்பிடலாம்.. எவ்வளோ தான் நீ கஷ்டபடுவ.."
"கொஞ்சம் பொறுங்க.. நீங்க தொட்டுக்க ஆம்லெட் இல்லேன்னா சரியா சாப்பிடமாட்டீங்க.. அதுவும் சின்ன வெங்காயம் போட்டாதான் டேஸ்ட் நல்ல இருக்கும்னு சொல்லுவீங்க... அதுக்குதான்"
கல்யாணம் முடிஞ்சு 1 வருடம்
"என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல் "
"சாம்பார்,பெரிய வெங்காயம் போட்டு ஆம்லெட்"
"அவ்வளோதானா"
"முடியலைங்க"
கல்யாணம் முடிஞ்சு 1 1 /2 வருடம்
"என்னம்மா இன்னைக்கு சாப்பிடலாமா "
"இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க, கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு குடுங்க ஆம்லெட் போடறேன் "
கல்யாணம் முடிஞ்சு 2 வருடம்
"என்னம்மா வெங்காயம் இல்லாம ஆம்லெட் போட்டு இருக்க. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல"
" ஒரு நாள் இதை சாப்பிட்டா என்ன... எல்லாத்தையும் நானே செய்யணுமா"
கல்யாணம் முடிஞ்சு 3 வருடம்
"என்னம்மா இத்துநூன்டு இருக்கு, கலக்க கூட இல்ல, அப்படியே உடைச்சு புல்பாயிலா ஊத்தி இருக்க.."
" முட்டை என்ன நானா போடுறேன். கோழி போட்டது சின்னதா இருக்கு , நான் என்ன செய்ய. சும்மா குறை சொல்லிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க"
கல்யாணம் முடிஞ்சு 5 வருடம்
"என்ன ஆப்பாயில் போட்டு இருக்க. எனக்கு புடிக்காது தெரியும்ல"
"ஒருநாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊர்ல இல்லாத அதிசய புருஷன் எனக்கு வந்து வாச்சிருக்கு...
கல்யாணம் முடிஞ்சு 7 வருடம்
"என்னம்மா இன்னைக்கும் ஒன்னும் செய்யலியா "
"சாதம் வடிசுருக்கேன். FRIDGE -ல நேத்தைய கொழம்பு இருக்கு. முட்டையும் இருக்கு. ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க"
கல்யாணம் முடிஞ்சு 10 வருடம் அதற்கு மேலே...
"என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யணும் "
"அதையும் நான் தான் சொல்லனுமா. எனக்கு என்ன பிடிக்கும்னு எங்களுக்கு தெரியாதா... அதை செய்யுங்க"
10.6.11
போரிஸ்கா: செவ்வாய்கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால்...
7.6.11
2.6.11
மற்றுமொரு மெகா ஊழல்... - தயாநிதி மாறனின் 323 தொலைபேசி இணைப்புகள்
நன்றி : தினமணி
இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது.
323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன.
2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களை 97;ிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும். டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.
இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.
கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இத;ன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது
சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை. இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.
30.5.11
சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்

26.5.11
நியூட்டனின் (காதல்) விதி...
முதல் விதி :
ஒரு பையனின் பெண் மீதான காதல் ஆனது, தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஒரு வெளிப்புற விசை (அந்த பெண்ணின் அண்ணன் அல்லது அப்பா) வந்து அப் பையனின் கை கால்களை உடைக்காதவரை..
இரண்டாம் விதி :
ஒரு பெண்ணின் காதலானது தான் காதலிக்கும் பையனின் வங்கிக் கணக்கிற்கு நேர்மாறாகவும்,அதே சமயத்தில் வங்கிக் கணக்கின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ற படி குறையும்.
மூன்றாம் விதி :
நாம் எப்படி ஒருவர(ன)து தங்கையை காதலித்தோமோ அதைப் போல நம் தங்கையையும் ஒருவன்(ர்) காதலிப்பான்(ர்).
இதெல்லாம் எழுதனும்னு என்னோட விதி...
அத படிக்கனும்னு உங்க தல விதி..
24.5.11
சிரி. சிரி.. சிரி...
குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?
தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..
என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது?
ஆயுத விற்பனை விளம்பரம்
23.5.11
தேசிய விருது! என்கிற கேலிக்கூத்து....
ஸ்ரீசாந்த் ஜோக்ஸ்
***********
கங்குலி: வாப்பா ஸ்ரீசாந்த் இப்படி பக்கத்துல உட்காரு...
ஸ்ரீசாந்த்: என்ன அண்ணே ரொம்ப பாசமா கூப்பிடுறீங்க?
கங்குலி: எப்படியும் அடுத்த IPLல் எனக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் அதான் இப்பவே சீட் ரிசர்வ் செஞ்சி வைக்கிறேன்...
*********
பழமொழி: கேட்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்லுவானாம்.
புதுமொழி: கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா ஸ்ரீசாந்த் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தான்னு சொல்லுவானாம்.
********
ஜெயிலர்: உனக்கு இன்னைக்கு தூக்கு தண்டனை எதுனா கடைசி ஆசை இருந்தா சொல்லு!
கைதி: ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பதை பார்க்கனும்.
ஜெயிலர்: அது நடக்காத விசயம் வேற எதுனா கேளு...
கைதி: அப்ப ஸ்ரீசாந்த் மெயிடென் ஓவர் போடுவதை பார்க்கனும்.
ஜெயிலர்: இதை எல்லாம் காதால கேட்பதுக்கு பதில் இந்த கயித்துல நானே தொங்கிடுவேன்.
19.5.11
உலகையை அசத்திக் கொண்டிருக்கும் புத்தம் புதிய விளையாட்டு
17.5.11
சிரிக்க மட்டும்...
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
------------------------------------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
------------------------------------------------------------------------
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
------------------------------------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
------------------------------------------------------------------------
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!
------------------------------------------------------------------------
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"
------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
------------------------------------------------------------------------
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????
------------------------------------------------------------------------
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
------------------------------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
14.5.11
பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது
24.4.11
ராஜபக்சே பெயரை நீக்கியது டைம்ஸ் பத்திரிகை
19.4.11
நகைச்சுவை துணுக்குகள்
"நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாளர் அங்கே எழுதியிருந்தது
"love"
அவள் சொன்னதும் வழி விடப்பட்டது.
சொர்க்கத்தில் ஒரு வருடம் கழிந்தது.
ஒரு நாள் கடவுள் அவளிடம் வந்து இன்றொரு நாள் வருபவர்களை கவனித்துக் கொள் எனக்கு வேலை இருக்கிறது" என்றார்.
அவள் கேட்டில் நின்ற போது அவள் கணவன் வந்தான்,"ஹேய் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை"
"சரி பூமியில் எப்படி வாழ்ந்தாய்?"
"நீ காய்ச்சலாக கிடந்த போது பார்த்துக்கொண்டாளே ஒரு அழகான நர்ஸ் அவளை கல்யாணம் செய்து கொண்டேன் லாட்டரியில் பரிசு கிடைத்தது நாம் இருந்த சின்ன வீட்டை விற்று பெரிய அப்பார்ட்மெண்ட் போனோம் அப்புறம் டூர் போனபோது ஆக்சிடெண்ட் ஆகி இறந்து இங்கே வந்தேன் சரி எப்படி உள்ளே வருவது?"
"நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாள் அங்கே எழுதியிருந்தது,
"Czechoslovakia.
14.4.11
வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...

2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் இனவெறியன் ராஜபக்சேவுக்கு எதிராக (Not influential) வாக்களியுங்கள்…
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்
-
ஒரு பெண் இறந்து சொர்க்கம் போனாள்,வாசலில் நின்றிருந்த போது அங்கே கடவுள் வந்தார், அவள் அவசரமாக "எப்படி உள்ளே வருவது?" என்றாள். ...
-
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் ! டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் ! மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு...
-
பெட்டிங் கட்டுபவர்: ஒருத்தன் கூட ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பான்னு பெட்டு கட்ட மாட்டேங்கிறானுங்களே...இப்படியே போனா கம்பெனி நஷ்டத்தில் போய்விடு...
-
வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு! குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜி...
-
கணணியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் விடுபட கணணியில் விளையாட்டுக்களை விளையாடுவது வழக்கம். இன்னும...










