Custom Search

24.4.11

ராஜபக்சே பெயரை நீக்கியது டைம்ஸ் பத்திரிகை

 உலகின் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இருந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பெயரை டைம்ஸ் பத்திரிகை திடீரென நீக்கியுள்ளது.



வாசகர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில், அந்த பட்டியலில் அவரது பெயர் இதுவரை 4-ம் இடத்தில் இருந்தது.



இந்நிலையில், அந்த வாக்கெடுப்பில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதற்கான பணியில் அதிபர் ராஜபக்சேவின் ஊடகப்பிரிவு அலுவலகத்தில் தனிக் குழு ஒன்று செயல்பட்டதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.



இதனிடேயே போலி வாக்குகள் மூலம் ராஜபக்சேவின் பெயர் முன்னணிக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று காலை பட்டியலில் இருந்தே அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு எடுத்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பிரபலமான பத்திரிகையின் பட்டியலில் ராஜபக்சே பெயரை முன்னணியில் இடம்பெறச் செய்ய அதிபரின் ஊடக அலுவலகமே மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் நாழிதள் அறிவித்த முடிவு வரிசை

கருத்துகள் இல்லை:

அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்